கல்வியாளர் திரு. கருமுத்து கண்ணன் மறைவு – கனிமொழி எம்.பி இரங்கல்..!

Kanimozhi MP

கல்வியாளர் திரு. கருமுத்து கண்ணன் அவர்கள் மறைவெய்திய செய்தி அதிர்ச்சியளிக்கிறது என கனிமொழி எம்.பி ட்வீட். 

புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கருமுத்து கண்ணன் 18 ஆண்டுகளாக தக்காராக இருந்தவர். இவர் தியாகராஜர் மேலாண்மைக் கல்லூரி, கலைக்கல்லூரி, பொறியியல் கல்லூரி உள்ளிட்ட பல கல்வி நிறுவனங்களின் தாளாளர் மற்றும் நிர்வாகியாக இருந்துள்ளார்.

இவர், கடந்த சில நாட்களாகவே உடல் நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது மறைவுக்கு பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், கனிமொழி எம்.பி அவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அந்த இரங்கல் பதிவில், ‘கல்வியாளர் திரு. கருமுத்து கண்ணன் அவர்கள் மறைவெய்திய செய்தி அதிர்ச்சியளிக்கிறது. கல்வி, தொழில்துறை எனப் பல்துறைகளில் தனது சமூக வளர்ச்சிப் பணிகளால், மக்களின் அன்பையும் மரியாதையையும் பெற்றவர். அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.’ என பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்