கலைஞர் மருத்துவமனை திறப்பு தேதி மாற்றம்? – அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்.!

subramanian

கிண்டியில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் பல்நோக்கு மருத்துவமனை திறப்பு விழா தேதி மாற்றப்படும் என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேட்டி.

சென்னை கிண்டியில் புதியதாக ஆயிரம் படுக்கை வசதிகளுடன் கட்டப்பட்ட பல்நோக்கு மருத்துவமனை வளாகத்தை திறந்து வைக்க வர வேண்டும் என சமீபத்தில் டெல்லி சென்ற முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்து அழைப்பு விடுத்திருந்தார்.

இதனால், ஜூன் 5-ஆம் தேதி இந்த நிகழ்ச்சிக்காக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சென்னை வருவார் என குடியரசு தலைவர் மாளிகை தெரிவித்திருந்தது. இதுபோன்று, சென்னை YMCA மைதானத்தில் நடைபெறும் மறைந்த முன்னாள் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு தொடக்க விழா நிகழ்ச்சியிலும், குடியரசுத் தலைவர் கலந்து கொள்வார் என தெரிவிக்கப்பட்டது.

ஆனால், திடீரென குடியரசு தலைவர் தமிழக வருகை ரத்து செய்யபட்டுள்ளது எனவும், வரும் 5-ஆம் தேதி கலைஞர் மருத்துவமனை திறப்பு விழாவில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பங்கேற்கமாட்டார் என தகவல் வெளியானது.

இந்நிலையில், அதற்கு விளக்கமளிக்கும் வகையில், நேற்று புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், கிண்டியில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் பல்நோக்கு மருத்துவமனையை ஜூன் 5ம் தேதிக்கு பதிலாக மாற்று தேதியில் குடியரசுத் தலைவர் தான் திறந்து வைப்பார் என்று உறுதி செய்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்