ஓயாத வெப்பம்..! தமிழகத்தில் 20 இடங்களில் சதமடித்த வெயில்.!

தமிழகத்தில் நேற்று 20 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டியுள்ளது.
தமிழகத்தில் கோடை மழை ஒரு பக்கம் பொழிந்தாலும், கடும் கோடை வெயில் பல்வேறு இடங்களில் வாட்டி வதைத்து வருகிறது. நேற்று அதிகபட்சமாக மீனம்பாக்கம், வேலூர், திருத்தணியில் 106 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.
அந்த வகையில், தமிழ்நாட்டில் 20 இடங்களில் சதமடித்துள்ளது. அதில், வால்பாறை 106, மீனம்பாக்கம் 103, குன்னூர் 105, திருத்தணி 102, கொடைக்கானல் 104, நுங்கம்பாக்கம் 102 என பதிவாகியுள்ளது.
12 மாவட்டங்களில் மழை:
தமிழ்நாட்டில் இன்று நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், சேலம், கள்ளக்குறிச்சி மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.