சொத்துக்கள் முடக்கம்.? கிருத்திகா போட்ட டிவீட்.! ரி-டிவீட் செய்து சிரித்த உதயநிதி ஸ்டாலின்.!

உதயநிதி அறக்கட்டளை சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது குறித்து வெளியான செய்திகள் பற்றி கிருத்திகா உதயநிதி தனது டிவிட்டர் பக்கத்தில் நகைச்சுவையாக மறுப்பு தெரிவித்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் அமலாக்கத்துறையினர் லைகா நிறுவனம் மற்றும் கல்லல் அறக்கட்டளை அலுவலகங்களில் சோதனைகளை மேற்கொண்டனர். இந்த சோதனையில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடைபெற்றதாக தெரியவந்ததை அடுத்து அமலாக்கத்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தினர்.
அப்போது கல்லல் அறக்கட்டளைக்கும், உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளைக்கும் பணப்பரிவர்த்தனை நடைபெற்றதாகவும், அதனால் இரு அறக்கட்டளை சொத்துக்களையும் முடக்கியதாக அமலாக்கத்துறை தங்கள் அதிகாரபூர்வ டிவிட்டர் கணக்கில் இருந்து பதிவிட்டன.
இது குறித்து பல்வேறு செய்திகளில் உதயநிதி அறக்கட்டளையின் தலைமை அதிகாரி கிருத்திகா உதயநிதி என பதிவிட்டு செய்திகள் வெளியிட்டு இருந்தனர்.
இதனை அடுத்து தற்போது தனது டிவிட்டர் பக்கத்தில் கிருத்திகா உதயநிதி பதிவிடுகையில், போலி செய்திகளை பரப்புவோர் . குறைந்தபட்சம் எனது புகைப்படத்தையாவது நன்றாக வைத்து விடுங்கள் என கிண்டலாக அந்த செய்திகளை மறுத்துள்ளார். மனைவி கிருத்திகா உதயநிதியின் டிவிட்டர் பதிவை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ரிடிவீட் செய்து சிரிக்கும் பதிவை இட்டுள்ளார்.
— Udhay (@Udhaystalin) May 27, 2023
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025