மத்தியப்பிரதேச தேர்தலில் காங்கிரஸ் 150 இடங்களைக் கைப்பற்றும்… ராகுல் காந்தி.!

கர்நாடக தேர்தலைப்போல் மத்தியப்பிரதேச தேர்தலிலும் காங்கிரஸ் 150 இடங்களைக் கைப்பற்றும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
மத்தியப்பிரதேச சட்டமன்றத் தேர்தல் இந்த ஆண்டு நவம்பரில் நடைபெற உள்ளதை முன்னிட்டு, காங்கிரஸ் கட்சி 150 இடங்களைக் கைப்பற்றும் என ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். 230 உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான சட்டமன்ற தேர்தல் மத்தியப்பிரதேசத்தில் இந்த ஆண்டு நவம்பர் மாதம் நடத்த இந்தியத் தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.
கர்நாடக தேர்தலில் 136 இடங்களுடன் பெரும்பான்மையான வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி இதேபோல், மத்தியப்பிரதேச சட்டமன்ற தேர்தலிலும் 150 இடங்களைக் கைப்பற்றும் என்று எங்கள் கணிப்பு கூறுகிறது என காங்கிரஸ் முன்னாள் எம்.பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மத்தியப்பிரதேச முன்னாள் முதல்வர் கமல்நாத் உள்ளிட்ட கட்சித் தலைவர்களுடனான சந்திப்பிற்கு பிறகு ராகுல் காந்தி இதனை கூறினார்.</p>