முதல் இந்திய விக்கெட் கீப்பர் என்ற சாதனையை படைத்தார் எம்.எஸ்.தோனி!

ms dhoni record

டி20 போட்டிகளில் 300 விக்கெட்டுகளை சாய்த்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் என்ற சாதனையை படைத்தார் எம்.எஸ்.தோனி.

குஜராத் அணிக்கு எதிரான ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியில், மின்னல் வேகத்தில் ஸ்டம்பிங் செய்து சுப்மன் கில் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம், டி20 போட்டிகளில் 300 விக்கெட்டுகளை சாய்த்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் என்ற சாதனையை படைத்தார் எம்.எஸ்.தோனி.

அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில், ரவீந்திர ஜடேஜாவின் பந்துவீச்சில் குஜராத் தொடக்க வீரர் ஷுப்மான் கில்லை ஸ்டம்பிங் செய்து தோனி இந்த சாதனையை பதிவு செய்தார்.

சென்னை அணியின் கேப்டன் 41 வயதான எம்எஸ் தோனியின் ரியாக்ஷன் நேரம் 0.1 வினாடிகளில் இருந்தது. இந்த போட்டியின் போது 250 ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்ற முதல் வீரர் என்ற பெருமையையும் தோனி பெற்றார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்