போக்குவரத்து ஊழியர்கள் விவகாரம்.! இன்று முத்தரப்பு பேச்சுவார்த்தை.!

போக்குவரத்து ஊழியர்கள் விவகாரம் குறித்து இன்று தொழிற்சங்க நிர்வாகிகளுடன் அமைச்சர் சிவசங்கர் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
தமிழ்நாடு போக்குவரத்து கழகம் சார்பில் புதிய பேருந்துகள் வாங்கப்பட உள்ளன. இந்த பேருந்துகளை தனியார் நிறுவனங்களின் உதவிகொண்டு செயல்படுத்த அரசு முடிவு எடுத்துள்ளதாக எழுந்த தகவலை அடுத்து தொழிற்சங்கங்கள் போராட்டத்தை அறிவித்தனர். அரசு போக்குவரத்து கழகம் தனியார்மயமாகும் என்றே பேச்சுக்கே இடமில்லை எனவும் இதுகுறித்த பேச்சுவார்த்தை நடத்தப்படும் எனவும் அமைச்சர் சிவசங்கரன் அறிவித்து இருந்தார்.
இந்நிலையில், இந்த தனியார் மயமாக்கல் குறித்து சில தினங்களுக்கு முன்னர், மாலை சென்னை புறநகர் பேருந்து ஓட்டுனர்கள் திடீரென வேலை நிறுத்தகத்தில் ஈடுப்பட்டனர். உடனடியாக அதிகாரிகள் சமரசம் பேசி தனியார்மயமாக்கல் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்ட பின்னர் வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டு உடனடியாக பேருந்துகள் இயக்கப்பட்டன.
இந்நிலையில், இன்று பல்வேறு தொழிற்சங்க நிர்வாகிகளுடன் அமைச்சர் சிவசங்கர் அதிகாரிகள் என முத்தரப்பு பேச்சுவார்தையானது தேனாம்பேட்டை, டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள தொழிலாளர் நல சங்க அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் தனியார் ஒப்பந்த ஓட்டுனர்கள் கொண்டு அரசு பேருந்துகள் இயக்குவது உள்ளிட்ட பல்வேறு விஷங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025