தனுஷ் குரலில் அனுஷ்கா படத்தின் “என்னடா நடக்குது” பாடல் வெளியானது.!

தனுஷ் குரலில் வெளியான அனுஷ்கா படத்தின் “என்னடா நடக்குது” பாடல் வெளியானது.
நடக்க அனுஷ்கா ஷெட்டி நடித்துள்ள புதிய படம் ‘மிஸ் ஷெட்டி மிஸ்டர் பாலிஷெட்டி’. மகேஷ் பாபு பி எழுதி இயக்கியுள்ள இப்படத்தில் நவீன் பாலிஷெட்டி நாயகனாக நடித்துள்ளார். மேலும், இப்படத்தில் முரளி சர்மா, ஜெயசுதா, துளசி மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். UV கிரியேஷன்ஸ் தயாரிக்கும் இந்த திரைப்படம் இந்த கோடையில் தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.
Jealous Mr Polishetty looks cute ????
And Miss Shetty is looking gorgeous as always ❤️
Can’t wait to see this movie..it looks like a fun ride !!
Please announce the release date !! Can’t wait to see in theatres !!#Anushkashetty #NaveenPolishetty#MissShettyMrPolishetty pic.twitter.com/QGBToRzZ5A
— Prabhas_TFI_fangirl (@spark_vibes) May 31, 2023
தற்போது, படத்தில் நடிகர் தனுஷ் பாடிய ‘என்னடா நடக்குது’ பாடல் வெளியானது. இந்தப் பாடலுக்கு தமிழில் என்னடா நடக்குது என்றும் தெலுங்கில் ஹதவிடி என்றும் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. பாடல் வரிகள் மனதைக் கவரும் வகையில் அமைந்திருக்கிறது.
தனுஷின் குரலில் நடிகர் நவீன் பாலிஷெட்டியின் சோகமான வாழ்க்கையை சித்தரிக்கும் இது பாடல் வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. ராதன் இசையமைத்த, சரஸ்வதி புத்ரா ராமஜோகய்யா சாஸ்திரி தெலுங்கு பாடல் வரிகளை எழுதியுள்ளார், ராதன் தமிழ் பதிப்பை எழுதியுள்ளார்.

கடந்த மாதம் மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி படத்தின் டீசர் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. அனுஷ்கா ஷெட்டி சமையல் கலைஞராகவும், நவீன் பாலிஷெட்டி நகைச்சுவை நடிகராகவும் நடித்துள்ளனர். கடந்த 2 வருடங்களாக எந்த படத்திலும் நடிக்காமல் ஓய்வெடுத்த அனுஷ்கா, தற்போது சினிமாவிற்கு ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.