10 லட்சம் சம்பளம்..மொபைல் கேம் விளையாடினாலே போதும்..! பிரபல நிறுவனம் அசத்தல் அறிவிப்பு..!

Chief Gaming Officer

தற்போதைய நவீன உலகத்தில் ஸ்மார்ட்போன் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. அதிலும் இளம் வயதினர் மத்தியில் ஸ்மார்ட்போன் உபயோகம் என்பது கணக்கிட முடியாத அளவில் அதிகரித்து வருகிறது. ஸ்மார்ட்போனில் வீடியோக்கள் பார்ப்பதை தவிர கேம் விளையாடுவதற்கும் அதிக நேரம் செலவிடுகின்றனர்.

இந்த நேரத்தை பயனுள்ளதாக மாற்றும் வகையில், பிரபல மொபைல் நிறுவனமான ஐ-க்யூ (iQOO) அற்புதமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், நிறுவனத்தின் முதல் தலைமை கேமிங் அதிகாரி (CGS) பணிக்கு மொபைல் கேமிங்கில் ஆர்வமுள்ளவர்களை நியமிப்பதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு https://www.iqoo.com/in என்ற இணையதளத்தில் உள்ளது.

வயது மற்றும் சம்பளம்: 

தலைமை கேமிங் அதிகாரி பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் 18 முதல் 25 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். குறிப்பாக, அவர்கள் இந்தியாவில் இருக்க வேண்டும். தலைமை கேமிங் அதிகாரியாக தேர்ந்தெடுக்கப்படுபவருக்கு ரூ.10 லட்சம் சம்பளமாக வழங்கப்படும்.

தலைமை கேமிங் அதிகாரியின் (CGO) பங்கு என்ன.?

  • அறிமுகமாக உள்ள iQOO போன்களில் கேம்களை விளையாடி அதனை மதிப்பாய்வு செய்த பிறகு மதிப்புமிக்க நுண்ணறிவு தகவல்களை வழங்க வேண்டும்.
  • iQOO சமூகத்தில் உள்ள மொபைல் கேமர்களின் ஆர்வங்கள் மற்றும் தேவைககளை பற்றி பேச வேண்டும்.
  • மொபைல் கேமர்களுடன் தொடர்பில் இருந்து வலுவான உறவுகளை உருவாக்க வேண்டும்.

எப்படி விண்ணப்பிப்பது?

  • iQOO அதிகாரப்பூர்வ https://www.iqoo.com/in இணையத்தளத்தைத் திறக்கவும்.
  • படிவத்தில் கேட்கப்பட்ட அனைத்து விவரங்களையும் நிரப்பி பதிவு செய்யவும்.
  • எதிர்கால தேவைக்காக பதிவு செய்த படிவத்தின் ஸ்னாப்ஷாட்டை எடுக்கவும்.

தகுதி மற்றும் பணியின் காலம்:

தலைமை கேமிங் அதிகாரியாக தேர்ந்தெடுக்கப்படுபவர் 6 மாதம் பணியில் இருப்பார். வேறு நிறுவனத்தில் பணிபுரிபவரும் இதற்கு பதிவு செய்யலாம். இதற்கு எந்தவித பட்டமும் பெற்றிருக்க வேண்டியதில்லை. விளையாட்டில் ஆர்வம் மற்றும் திறமை உள்ளவர்களாக இருந்தால் மட்டுமே போதுமானது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்