#WTCFinal2023: ஆஸ்திரேலியாவை விழ்த்துமா இந்தியா..? தீவிரமான பயிற்சியில் பந்துவீச்சாளர்கள்.!!

WTCFinal2023

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்தின் ஓவல் மைதானத்தில் வரும்  ஜூன் 7ம் தேதி நடைபெறுகிறது. இந்த போட்டியில், ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணியும், பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியும் மோதுகிறது.

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு இன்னும் 6 நாட்களே உள்ள நிலையில், இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி வீரர்கள் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். அதைப்போல, மற்றோரு பக்கம் ஆஸ்திரேலிய அணி ஒரு மாதத்திற்கு மேலாக இங்கிலாந்திலேயே முகாமிட்டு தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.

குறிப்பாக ரோஹித் ஷர்மா, விராட் கோலி, புஜாரா, அக்சர் பட்டேல், முகமது சிராஜ், உமேஷ் யாதவ், ஜெய்தேவ் உனத்கட்,ஷர்துல் தாக்கூர் உள்ளிட்டோர் இங்கிலாந்தில் தீவீரமாக பயிற்சி எடுத்துவருகிறார்கள். குறிப்பாக இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் மிகவும் தீவிரமான பயிற்சியை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும், ஐபிஎல் கிரிக்கெட் போட்டி முடிந்து இந்திய வீரர்கள் மற்றும் ஆஸ்திரேலியா அணி வீரர்கள் பலரும் இங்கிலாந்திற்கு சென்று உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கு கூடுதலாக பயிற்சி எடுத்து  வருகிறார்கள்.

ஐபிஎல் இறுதிப்போட்டியில் சென்னை அணியும், குஜராத் அணியும், நேற்று முன்தினம் மோதியது. எனவே இந்த 2 அணிகளிலும் விளையாடிய சில இந்திய வீரர்கள் இன்னும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்காக இங்கிலாந்திற்கு செல்லாமல் இருக்கிறார்கள். குறிப்பாக சென்னை வீரர் ரவீந்தர ஜடேஜா, ரஹானே, ஆகியோர் சென்னையில் தான் இருக்கிறார். அதைப்போல முகமது ஷமி இன்னும் இங்கிலாந்திற்கு செல்லவில்லை. விரைவில் அவரும் இந்திய அணியின் பயிற்சியில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், கடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இந்திய அணி சென்ற நிலையில்,  நியூசிலாந்து அணியிடம் தோல்வி அடைந்தது. இதனை தொடர்ந்து இந்த முறை, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் இந்திய அணி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணி வீரர்கள் 

ரோஹித் சர்மா (கேப்டன்), ரவிச்சந்திரன் அஷ்வின், கே.எஸ்.பாரத், ஷுப்மன் கில், ரவீந்திர ஜடேஜா, விராட் கோலி, இஷான் கிஷன், சேதேஷ்வர் புஜாரா, அக்சர் படேல், அஜிங்க்யா ரஹானே, முகமது ஷமி, முகமது சிராஜ், ஷர்துல் தாக்கூர், ஜெய்தேவ் உனத்கட், உமேஷ் யாத்.

  • பெஞ்சில் இருக்கும் மாற்று வீரர்கள்  – யஷஸ்வி ஜெய்ஸ்வால், முகேஷ் குமார், சூர்யகுமார் யாதவ்

ஆஸ்திரேலியா வீரர்கள்

பேட் கம்மின்ஸ் (கேப்டன்), ஸ்காட் போலண்ட், அலெக்ஸ் கேரி, கேமரூன் கிரீன், மார்கஸ் ஹாரிஸ், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லாபுசாக்னே, நாதன் லியோன், ஜோஷ் இங்கிலிஸ், டாட் மர்பி, ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், டேவிட் வார்னர்.

  • பெஞ்சில் இருக்கும் மாற்று வீரர்கள் – மிட்ச் மார்ஷ், மாட் ரென்ஷா

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்