நீங்க ‘xiaomi’ பயனர்களா…? 2 ஆண்டுகள் வாரண்டி நீட்டிப்பு.! உங்க மொபைல் இந்த லிஸ்ட்ல இருக்கா.?

சியோமி (Xiaomi) நிறுவனம் இந்தியாவில் உள்ள பயனர்களுக்கு ஒரு அசத்தலான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அது வேற ஒன்று இல்லை… தனது பிராண்டின் சில போன்களின் வாரண்டியை கூடுதலாக இரண்டு ஆண்டுகள் நீட்டித்துள்ளது. அண்மைய காஉங்களுக்காக லமாக, சியோமி நிறுவன பிராண்ட் மொபைல் போன்களில் சிஸ்டம் ரீதியாக பிரச்சனைகளை சந்தித்து வந்த வாடிக்கையாளர்கள் புகார் அளித்தனர்.

இந்நிலையில், வாடிக்கையாளர்களின் புகார்களை கருத்தில் கொண்டு, அந்த நிறுவனம் தனது டிஸ்கார்ட் வழியாக இந்த இரண்டு ஆண்டு நீட்டிப்பு செய்தியை அறிவித்துள்ளது. ஆனால், இது ட்விட்டர் போன்ற பிற சமூக வளைத்தளங்களில் அந்த அறிவிப்பு வெளியாகவில்லை.

சியோமி அறிவிப்பு தகுதியான போன் லிஸ்ட்:
சியோமியின் அதிகாரப்பூர்வ தகவலின் படி, எம்ஐ 11 அல்ட்ரா (Mi 11 Ultra) ரெட்மி நோட் 10 ப்ரோ மேக்ஸ் (Redmi Note 10 Pro Max) ரெட்மி நோட் 10 ப்ரோ (Redmi Note 10 Pro) மற்றும் போக்கோ எக்ஸ்3 ப்ரோ (Poco X3 Pro) ஆகியவை 2 வருட நீட்டிக்கப்பட்ட உத்தரவாத ஆதரவிற்கு தகுதியுடையவை என்று நிறுவனம் அறிவித்துள்ளது.

என்ன பிரச்சனை இருந்தால் மாற்றிக்கொள்ளலாம்?
கேமரா அல்லது மதர்போர்டு தொடர்பான கோளாறு உள்ளவர்களுக்கு, அந்நிறுவனம் வழங்கிய விவரங்களின்படி, புதிய உத்தரவாதத்தின் கீழ் Xiaomi அதை சரிசெய்து கொடுக்குறது என்றும், அதற்கான பொறுப்பை Xiaomi நிறுவனமே ஏற்றுகொள்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கெல்லாம் சியோமி பொறுப்பல்ல:
குறிப்பாக, ரூட் செய்யப்பட்ட போன்கள், டிஸ்பிளே டேமேஜ் அல்லது போன் சுற்றியுள்ள பக்கங்கள் சேதமடைந்தால் சியோமி நிறுவனம் பொறுப்பல்ல என்று தெளிவாக கூறியிருக்கிறது.

இந்த வாய்ப்பை எப்படி பெறுவது?
இந்த அறிய வாய்ப்பை பெற வாடிக்கையாளர்கள் அருகிலுள்ள Xiaomi சேவை மையத்தை அணுகலாம். கூடுதலாக அறிவிக்கப்பட்ட இரண்டு வருட வாரண்டியில் தங்கள் ஃபோனின் சிக்கல்கள் தகுதி பெற்றிருந்தால், பயனர்கள் பழுதுபார்ப்புக்கு கூடுதல் கட்டணம் செலுத்த தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு விரைவில் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளங்களில் அறிவிக்கப்பட்டால், Xiaomi பயனர்கள் மிகவும் பயனைடவர்.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025