மல்யுத்த வீரர், வீராங்கனைகளின் நிலைக்கு மோடி அரசு தான் காரணம்… ராகுல் காந்தி குற்றச்சாட்டு.!

Rahul Modi

பதக்கங்களை வாங்கித்தந்த மகள்களின் நிலைக்கு, பிரதமர் மோடி அரசு தான் காரணம் என்று ராகுல் காந்தி குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின்(WFI) தலைவர் பிரிஜ் பூசன் சரண் சிங்கிற்கு எதிராக, பாலியல் குற்றச்சாட்டுகளை அடுத்து அவரைக் கைது செய்யவேண்டும் என பல நாட்களாக மல்யுத்த வீரர், வீராங்கனைகள் தேசிய தலைநகர் டெல்லியில் போராட்டம் செய்து வருகின்றனர், மேலும் தங்களது எதிர்ப்பை மேலும் வலுப்படுத்த பெற்ற பதக்கங்களை புனித கங்கை நதியில் வீசப்போவதாகவும் அறிவித்திருந்தனர்.

மல்யுத்த வீரர், வீராங்கனைகளுக்கு பல்வேறு தரப்பிலும் ஆதரவு தெரிவித்து வந்த நிலையில், முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பதக்கங்களை வீசுவது குறித்த மல்யுத்த வீரர்களின் முடிவுக்கு அவசரப்பட வேண்டாம் என இன்று அறிக்கை வெளியிட்டிருந்தனர். இந்த நிலையில் காங்கிரஸ் முன்னாள் எம்.பி ராகுல் காந்தி மல்யுத்த வீரர், வீராங்கனைகளின் நிலைக்கு மோடி அரசு தான் காரணம் என கூறியுள்ளார்.

இது குறித்து ராகுல் தனது ட்வீட்டில், நாட்டிற்காக 25 பதக்கங்கள் பெற்றுத்தந்த மகள்கள், நீதி கேட்டு வீதிகளில் போராடுகின்றனர். ஆனால் 15 பாலியல் குற்றச்சாட்டு மற்றும் 2 எப்.ஐ.ஆர் விளக்குகளுடன் எம்.பி பிரிஜ் பூசன் சரண் சிங், பிரதமர் மோடியின் பாதுகாப்பில் பத்திரமாக இருக்கிறார். மகள்களின் இந்த நிலைக்கு மோடி அரசுதான் காரணம் என்று பதிவிட்டுள்ளார்.</

p>

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்