ராஜஸ்தானில் 7 ஐஏஎஸ் மற்றும் 30 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்..!

ராஜஸ்தானில் 7 ஐஏஎஸ் (IAS) மற்றும் 30 ஐபிஎஸ் (IPS) அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
ராஜஸ்தானில் தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறையிலிருந்து கோடிக்கணக்கான பணம் மற்றும் தங்க பிஸ்கட்டுகள் மீட்கப்பட்டதை அடுத்து, முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான ராஜஸ்தான் அரசு, மாநிலத்தில் பல உயர் அதிகாரிகளை இடமாற்றம் செய்துள்ளது.
இது குறித்து வெளியான அறிக்கையில், நிர்வாகத்தின் வெளிப்படைத்தன்மை மற்றும் நம்பகத்தன்மையை மேம்படுத்தும் முயற்சியில், ராஜஸ்தான் அரசு, மாநில நிர்வாகச் சேவைகளில் பெரிய அளவில் மாற்றியமைத்துள்ளது என்றும் 7 ஐஏஎஸ் மற்றும் 30 ஐபிஎஸ் அதிகாரிகள் வெவ்வேறு துறைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நிர்வாகத்தின் மீது நம்பிக்கையை பராமரிக்கும் நோக்கத்துடன், ஒரு குறிப்பிட்ட பதவியில் ஒரு அதிகாரியின் பதவிக்காலம் அதிகபட்சம் மூன்று ஆண்டுகள் மற்றும் சிறப்பு வழக்குகளில், ஐந்து ஆண்டுகள் இருக்க வேண்டும்” என்று அறிவுறுத்தப்படுகிறது.
இதில் ராஜஸ்தான் போலீஸ் அகாடமியின் இயக்குநராக இருந்த ஐபிஎஸ் அதிகாரி ராஜீவ் சர்மா, காவல்துறை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். கானா ராம், எம்.எல்.சௌஹான், புஷ்பா சத்யானி, கௌரவ் அகர்வால், உத்சவ் கௌஷல், தேவேந்திர குமார் மற்றும் அக்ஷய் கோதாரா ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்ட ஏழு ஐஏஎஸ் அதிகாரிகள் ஆவர்.