ஒடிசா ரயில் விபத்து – உயிரிழந்த தமிழர்கள் குடும்பத்தினருக்கு ரூ.5லட்சம் இழப்பீடு..! – முதல்வர் மு.க.ஸ்டாலின்

ரயில் விபத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சமும், காயம் அடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
ஒடிசா ரயில் விபத்து நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த கோர விபத்தில் சிக்கி 200-க்கும் மேற்பட்டோர் 800-,க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதுள்ளனர். மேலும், மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
ஒடிசாவில் ரயில் விபத்து காரணமாக, தமிழ்நாட்டில் இன்று ஒருநாள் துக்க நாளாக அனுசரிக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதனை தொடர்ந்து, ரயில் விபத்தில் உயிரிழந்த தமிழர்கள் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சமும், ரயில் விபத்தில் காயம் அடைந்த தமிழர்களுக்கு ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
ஏற்கனவே மத்திய அரசு சார்பில் இறந்தவர்கள் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.2 லட்சமும் இழப்பீடாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.