ஒடிசா ரயில் விபத்து – சென்னையில் இருந்து ஒடிசாவுக்கு சிறப்பு ரயில் இயக்கம்…!

சென்னையில் இருந்து ஒடிசா தலைநகர் புவனேஸ்வருக்கு இன்று இரவு சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவிப்பு.
ஒடிசா ரயில் விபத்து நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த கோர விபத்தில் சிக்கி 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தயுள்ள நிலையில், 800-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதுள்ளனர். மேலும், மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
மீட்பு பணிகள் தொடர்ந்து வரும் நிலையில், பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், ஒடிசாவில் ரயில் விபத்து காரணமாக, தமிழ்நாட்டில் இன்று ஒருநாள் துக்க நாளாக அனுசரிக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
மேலும், சென்னையில் இருந்து ஒடிசா தலைநகர் புவனேஸ்வருக்கு இன்று இரவு சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
விபத்தில் சிக்கி காயம் அடைந்த, பலியானோரின் உறவினர்கள் இந்த ரயில் மூலமாக புவனேஷ்வர் பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.