#TrainAccident: ஒடிசா செல்லும் 48 ரயில்கள் ரத்து..! 39 ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கம்..!

ஒடிசா ரயில் விபத்து காரணமாக 48 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஒடிசாவில் பஹானாகா பஜார் ரயில் நிலையம் அருகே நேற்று ஷாலிமார்-சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ், பெங்களூரு-ஹவுரா எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரயில் ஆகிய 3 ரயில்கள் ஒன்றின் மீது ஒன்று மோதி பெரும் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இதுவரை 238 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 900-க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்ததாகவும் ரயில்வே நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
இந்த ரயில் விபத்தைத் தொடர்ந்து ஒடிசா செல்லும் 48 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து ரயில்வே வாரியத்தின் செயல் இயக்குநர் அமிதாப் சர்மா, 100க்கும் மேற்பட்டோர் கருணைத் தொகை வழங்க பாலசோர், சோரோ மற்றும் பஹானாகா பஜார் ஆகிய மூன்று இடங்களில் கவுன்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன என்று கூறினார்.
மேலும், தற்போது வரை 48 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், 39 ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படுவதாகவும் மற்றும் 10 ரயில்கள் குறுகிய கால நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது எனவும் அமிதாப் சர்மா தெரிவித்துள்ளார்.
#WATCH | As of now, more than 100 people have claimed ex-gratia payments. Counters for the same have been set up at three places-Balasore, Soro and Bahanaga Bazar…As of now 48 trains cancelled, 39 diverted and 10 short-terminated: Amitabh Sharma, Executive Director, Information… pic.twitter.com/SPKIwKRvIM
— ANI (@ANI) June 3, 2023