தயார் நிலையில் தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை.!

ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 70 ஐசியூ படுக்கைகள் தயாராக வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்.
ஒடிசாவில் நேற்று இரவு கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், ஹவுரா ரயில் மற்றும் சரக்கு ரயில் ஆகிய 3 ரயில்களும் மோதி பெரும் விபத்துக்குள்ளானதில், 238 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 900க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.
ஒடிசா ரயில் விபத்தில் படுகாயம் அடைந்த தமிழ்நாட்டை சேர்ந்த 55 பேர் விமானம் மூலம் சென்னைக்கு அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு அரசு மருத்துவமனைகளில் உயர் சிகிச்சை அளிக்க தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 70 ஐசியூ படுக்கைகள் தயாராக வைக்கப்பட்டுள்ளன. சென்னையில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் ஓமந்தூரார் மருத்துவமனையிலும் படுக்கைகள் போதுமானதாக உள்ளது. மருத்துவ குழுவினர் தயார் நிலையில் உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் தெரிவித்துள்ளார்.