மாநில கட்டுப்பாட்டு அறைக்கு இதுவரை 8 பேர் தொடர்பு கொண்டுள்ளனர் – அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்

ஒடிசா ரயில் விபத்து தொடர்பான முழு விவரங்களை இன்னும் கிடைக்கவில்லை என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் பேட்டி.
எழிலகத்தில் உள்ள மாநில கட்டுப்பாட்டு மையத்தில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ஆய்வு செய்தார். அதன்பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ஒடிசா ரயில் விபத்து தொடர்பான முழு விவரங்களை இன்னும் கிடைக்கவில்லை.
ரயில் விபத்தில் சிக்கிய தமிழர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. மாநில கட்டுப்பாட்டு அறைக்கு இதுவரை 8 பேர் தொடர்பு கொண்டுள்ளனர். விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ய அதிகாரிகள் குழு ஒடிசா சென்றுள்ளது. காயம் அடைந்தவர்கள் உடல்நலத்தை பரிசோதித்து சென்னை அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.