LIVE: ஒடிசா விபத்து…தமிழர்களில் 3 பேர் பாதுகாப்பாக உள்ளதாக தமிழ்நாடு அரசு தகவல்!!

தமிழர்களின் நிலை
ஒடிசாவில் விபத்துக்குள்ளான ரயிலில் பயணித்த தமிழர்களில், 8 பேரின் நிலை இதுவரை தெரியாமல் இருந்த நிலையில், தற்போது அதில் 3 பேர் பாதுகாப்பாக இருப்பதாக மாநில அவசர கால கட்டுப்பாட்டு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும்,சென்னையை சேர்ந்த ஜெகதீசன் கோவையை சேர்ந்த நாரகணி கோபி ஆகிய இருவரும் வீடு திரும்பினர் என்றும், கமல் என்பவர் ரயிலில் பயணிக்கவில்லை எனவும் மீதமுள்ள 5 பேரை தொடர்பு கொள்ள முடியவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
4.6.2023 – 5.00PM
நிவாரண தொகை அறிவித்த ஆந்திர முதலமைச்சர்
ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்த ஆந்திராவைச் சேர்ந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் வழங்கப்படும் எனவும், படுகாயம் அடைந்தவர்களுக்கு 5 லட்சம் மற்றும் சிறு காயங்கள் அடைந்தவர்களுக்கு 71 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் எனவும் ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் அறிவித்துள்ளார்.
4.6.2023 – 4.00PM
இலவச பேருந்து சேவை
ஒடிசா ரயில் விபத்து காரணமாக கட்டாக், பூரி, புவனேஸ்வரில் இருந்து கொல்கத்தாவுக்கு இலவச பேருந்து சேவையை என முதலமைச்சர் நவீன் பட்நாயக் தற்போது அறிவித்துள்ளார்.
In view of disruption of train services caused by #Bahanaga train tragedy, CM @Naveen_Odisha has announced free bus service to Kolkata from Puri, Bhubaneswar & Cuttack. The entire cost will be borne from Chief Minister’s Relief Fund & arrangement will continue till restoration of…
— CMO Odisha (@CMO_Odisha) June 4, 2023
4.6.2023 – 3.45PM
ரயில்வே அமைச்சர் பதவி விலக வேண்டும்
ஒடிசா ரயில் விபத்துக்கு பொறுப்பேற்று ரயில்வே அமைச்சர் பதவி விலக வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
4.6.2023 – 3.15PM
தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு
வெப்ப சலனம் காரணமாக நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், கரூர், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, சேலம், கள்ளக்குறிச்சி மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. வெப்பநிலை 39 டிகிரி முதல் 41 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கலாம்; ஓரிரு இடங்களில் இயல்பில் 2 – 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கலாம்.
4.6.2023 – 2.29 PM
5 லட்சம் நிவாரணம்
ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 5 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு 1 லட்சமும் வழங்கப்படும் என்றும்,உயிரிழந்தவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார்.
தீ விபத்து
டெல்லியின் ஜஹாங்கிர்புரியில் உள்ள குடிசைப் பகுதியில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து 11-12 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு வந்ததாக டெல்லி தீயணைப்பு சேவைகள் உதவி பிரிவு அதிகாரி ஆர்.கே.சின்ஹா தெரிவித்தார். அப்பகுதியில் குப்பைகள் கிடக்கும் திறந்தவெளிப் பகுதியில் தீ பரவத் தொடங்கியது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
4.6.2023
லேட்டஸ்ட் செய்திகள்
உச்சநீதிமன்ற அதிகாரம் குறித்து கேள்வி எழுப்பிய குடியரசுத் தலைவர்.., முதல்வர் ஸ்டாலின் கண்டனம்.!
May 15, 2025
இந்தியா பயப்படாது…அத்துமீறினால் பாகிஸ்தானுக்கு பதிலடி தான்” அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு!
May 15, 2025