கடிக்க வந்த தெருநாய்…போராடி தப்பிய சிறுவன்..! வைரலாகும் வீடியோ..!

தெலுங்கானாவில் தன்னை கடிக்க வந்த தெருநாயிடம் இருந்து தப்பிக்கும் சிறுவனின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
தெலுங்கானா மாநிலம் மேட்ச்சலில் உள்ள ஸ்ரீராம் நகரில் தெருநாய் ஒன்று சிறுவனை தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீராம் நகரில் சாய் சரித் என்ற 10 வயது சிறுவன் தனது வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்த போது, தெருநாய் ஒன்று திடீரென சிறுவனை நோக்கி ஓடி வந்து கடிக்க முயன்றது.
ஆனால் அந்த சிறுவன் நாயின் தாக்குதலை எதிர்கொண்டு, அந்த இடத்திலிருந்து தப்பித்து அவனது வீட்டிற்குள் சென்றுள்ளான். இருந்தும் கை, கால்களில் சிறு சிறு காயங்கள் ஏற்பட்டதால் சிறுவனை பெற்றோர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
தெருநாய்களால் குடியிருப்பு வாசிகளுக்கு சிரமம் ஏற்படுவதாகவும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகிய இந்த சம்பவம், சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Another dog attack in Hyderabad
Location:Sri ram nagar colony,Suraram.
Will government wake up and get some shame
solve the Telangana issues before talking about Delhi or Odisha.
Peak shamelessness. pic.twitter.com/WncockAiY6
— Gayathri Bandari (@GayathriBDevi) June 4, 2023