வட்டார கல்வி அலுவலர் பணிக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் – ஆசிரியர் தேர்வு வாரியம்

education officers

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தமிழக முழுவதும் காலியாக உள்ள 33 வட்டார கல்வி அலுவலர்கள் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியீடு.

தமிழகத்தில் பள்ளிக் கல்வித்துறையில் காலியாக உள்ள 33 வட்டார கல்வி அலுவலர் பணியிடத்திற்கு நாளை விண்ணப்பிக்கலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் காலியாக உள்ள வட்டார கல்வி அலுவலர் பணியிடங்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு நடத்தி நிரப்பப்பட உள்ளன.

அதன்படி, www.trb.tn.gov.in என்ற இணையதளம் மூலம் நாளை முதல் ஜூலை 5-ஆம் தேதி மாலை 5 மணி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த காலி பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு வரும் செப்.10ம் தேதி நடைபெறும் என்றும் இந்த எழுத்து தேர்வு நடைபெறும் தேதி தற்காலிகமானது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்