ஐ.பி.எல் கோப்பையுடன் முதலமைச்சரை சந்தித்த சி.எஸ்.கே. உரிமையாளர்கள்!!

CMOTamilNadu

நடந்து முடிந்த ஐபிஎல் கிரிக்கெட்டி போட்டியில் எம்.எஸ் தோனி தலைமையிலான, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5-வது முறையாக கோப்பையை வென்றது. இதற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துக்களையும் தெரிவித்திருந்தார். இதனை தொடர்ந்து ஐபிஎல் கோப்பையுடன் முதலமைச்சரை இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் என்.சீனிவாசன் சந்தித்துள்ளார்.

ஐபிஎல் 2023 கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றதையொட்டி கோப்பையை இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் துணைத் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் என்.சீனிவாசன், இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் முழு நேர இயக்குநர் ரூபா குருநாத் ஆகியோர் சேர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துக்களை பெற்றனர்.  என்.சீனிவாசன் மற்றும் ரூபா குருநாத்  இருவரும் சென்னை அணியின் உரிமையாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்