மாவீரன் படத்தை தட்டி தூக்கிய ரெட் ஜெயண்ட்…அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!!

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது இயக்குனர் மாடன் அஸ்வின் இயக்கத்தில் மாவீரன் எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் வரும் ஜூலை 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை அதிதி ஷங்கர் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், படத்தின் ரிலீஸ் தேதி கடைசியாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில். படத்தின் புதிய அப்டேட் இன்று மாலை 5 வெளியாகும் என முன்னதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்தது. அதனை தொடர்ந்து தற்போது அந்த அப்டேட் என்னவென்பது வெளியாகியுள்ளது.
அது என்னவென்றால், மாவீரன் படத்தின் தமிழக திரையரங்கு உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வாங்கியுள்ளது. இதற்கான வீடியோ ஒன்றையும் படத்தின் தயாரிப்பு நிறுவனமே வெளியீட்டு அறிவித்துள்ளது. படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வாங்கியுள்ளதால் படத்தின் ப்ரோமோஷன் வேற லெவலில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
We are Elated to announce that market leader @RedGiantMovies_ will be releasing #Maaveeran across TamilNadu! ????????????????@Siva_Kartikeyan #MaaveeranFromJuly14th #VeerameJeyam @madonneashwin @AditiShankarofl @iamarunviswa @DirectorMysskin #Saritha @suneeltollywood @iYogiBabu… pic.twitter.com/1ln2Fz6BUY
— Shanthi Talkies (@ShanthiTalkies) June 9, 2023