அரசு பேருந்துகளில் ஆன்லைன் மூலம் பணம் செலுத்தும் முறை விரைவில் அறிமுகம் – அமைச்சர் SS சிவசங்கர்.!

அரசு பேருந்துகளில் ஆன்லைன் மூலம் டிக்கெட்டுக்கு பணம் செலுத்தும் முறை, விரைவில் கொண்டு வரப்பட உள்ளதாக அமைச்சர் SS சிவசங்கர் தகவல் தெரிவித்துள்ளார்.
கோவையில் பேசிய அவர், இந்த திட்டத்தை சென்னையில் அமல்படுத்தும் பணி இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. அங்கு கொண்டு வந்த பின்னர், மற்ற பகுதிகளுக்கும் சோதனை அடிப்படையில் கொண்டு வரப்படும் என்றும், அதன் பின்னர் முழுமையாக அமல்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் பேசிய அவர், பைக் டாக்சி முறையை தமிழ்நாடு அரசு ஏற்கவில்லை. அதாவது, இரு சக்கர வாகனங்கள் டாக்ஸியாக பயன்படுத்தப்படுவதை தமிழ்நாடு அரசு ஏற்கவில்லை என்றும் இதற்கான மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் முழுமையக இல்லை எனவும் கூறினார்.