அமித்ஷாவின் வழக்கமான நிகழ்வு தான் இது.! பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விளக்கம்.!

மத்திய அமைச்சர் அமித்ஷா வழக்கமாக கட்சி நிகழ்வுகள் குறித்து விசாரிப்பார் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார்.
ஒருநாள் பயணமாக தமிழகம் வந்துள்ள மத்திய உள்துறை அமைச்சரும் பாஜக முக்கிய தலைவருமான அமித்ஷாவுக்கு நேற்று சென்னை விமான நிலையத்தில் பாஜக தொண்டர்கள் பலத்த வரவேற்பு அளித்தனர்.
அதன்பிறகு நேற்று இரவு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய இணையமைச்சர் எல்.முருகன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளுடன் அமித்ஷா ஆலோசனை நடத்தினார்.
இந்த சந்திப்பு குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசுகையில், வழக்கமாக அமித்ஷா கட்சி நிலவரம் பற்றி விசாரிப்பார். கள நிலவரம், கட்சியினரின் செயல்பாடுகள் என கேட்டு தெரிந்து கொள்வார். இந்த பயணமானது முழுக்க முழுக்க கட்சி சார்ந்த பயணம் தான். நாடாளுமன்ற கூட்டணி பற்றி பேசுவதற்கு எல்லாம் இன்னும் காலம் இருக்கிறது. என அமித்ஷா உடனான ஆலோசனைக்கு பிறகு மாநில தலைவர் அண்ணாமலை விளக்கம் அளித்தார்.
இன்று காலை 11 மணிக்கு தென் சென்னை பாஜக நிர்வாகிகளுடன் அமித்ஷா ஆலோசனை நடத்த உள்ளார்.