பிபார் ஜாய் புயல்..! நிலைமையை ஆய்வு செய்ய பிரதமர் மோடி தலைமையில் கூட்டம்…!

பிபார் ஜாய் புயல் தொடர்பான நிலைமையை ஆய்வு செய்ய பிரதமர் மோடி தலைமையில் கூட்டம் நடைபெறவுள்ளது.
மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய மிக தீவிர புயல் “பிபார் ஜாய்” 6 கிலோ மீட்டர் வேகத்தில் வடக்கு நோக்கி திசையில் நகர்ந்து, அதி தீவிர புயலாக வலுப்பெற்று, அதே பகுதியில் மும்பையில் இருந்து மேற்கே சுமார் 560 கிலோமீட்டர் தொலைவில், போர்பந்தரின் இருந்து தென்மேற்கில் சுமார் 340 கிலோமீட்டர் தொலைவில், 380 கிமீ தென்-தென்மேற்கில் தேவபூமி துவாரகாமில் நிலை கொண்டுள்ளது.
மேலும் இந்த புயல் வலுப்பெற்று, 14ம் தேதி காலை வரை வடக்கு நோக்கி நகர்ந்து, பிறகு, வடக்கு-வடகிழக்கு நோக்கி நகர்ந்து சௌராஷ்டிரா, கட்ச் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பாகிஸ்தான் கடற்கரை பகுதியில் உள்ள ஜகாவ் துறைமுகத்திற்கு அருகே, 15ம் தேதி மிக தீவிர புயலாக மாறி, 150 கிமீ வேகத்தில் புயல் கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இப்பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 125-135 கிமீ வேகத்தில் வீசும் என்றும், அப்பகுதி முழுவதும் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த பிபார் ஜாய் புயல் தொடர்பான நிலைமையை ஆய்வு செய்ய பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த கூட்டம் இன்று மதியம் 1 மணிக்கு நடைபெறவுள்ளது.