என்ன ஷாட் இது..? விராட் கோலியை விமர்சித்த சுனில் கவாஸ்கர்.!!

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் நேற்று இந்தியாவிற்கு எதிரான ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 209 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் முதன்முறையாக ஆஸ்திரேலிய அணி ஐசிசியின் அனைத்து வித கோப்பைகளையும் வென்றுள்ள அணி என்ற வரலாற்று சாதனையை நிகழ்த்தியுள்ளது.
மேலும், இந்திய அணி தோல்வியடைந்துள்ள நிலையில், பல முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் இந்திய அணி வீரர்கள் சரியாக விளையாடவில்லை என கூறி வருகிறார்கள். அந்த வகையில், முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விராட் கோலியின் ஆட்டத்தை விமர்சித்து பேசியுள்ளார்.
போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் கோலி 49- ரன்களில் ஆட்டமிழந்ததைப் அவர் பேசியுள்ளார். இது குறித்து பேசிய சுனில் கவாஸ்கர் “விராட் கோலி அடித்தது ஒரு மோசமான ஷாட்…இது ஒரு சாதாரண ஷாட்.. கோலி என்ன ஷாட் விளையாடினார் என்று நீங்கள் கேட்க வேண்டும். இந்த மாதிரி ஷாட் ஆடினால் எப்படி சதம் அடிக்கப் போகிறீர்கள்..?” என கூறியுள்ளார்.