உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற ஆஸ்திரேலியா… அஷ்வின் போட்ட ட்வீட்.!

Ashwin Tweet

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் இந்திய அணியின் தோல்விக்கு பிறகு அஷ்வின் ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2021-23 காலகட்டத்திலான டெஸ்ட் தொடர்களின் புள்ளி பட்டியலின் அடிப்படையில் முதல் இரண்டு இடங்களை பிடித்த ஆஸ்திரேலிய மற்றும் இந்திய அணிகளுக்கு இடையில் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் போட்டி நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலிய அணி இந்திய அணியை 209 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

இதில் இந்திய அணி இரண்டாவது முறையாக ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு முன்னேறியும் கோப்பையை வெல்லும் வாய்ப்பை நழுவ விட்டது. இதனை அடுத்து உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் பவுலரும், இந்திய அணியின் முன்னணி சுழற் பந்துவீச்சாளருமான ரவிச்சந்திரன் அஷ்வின் தனது சமூக வலைதளத்தில் ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அஷ்வின் தனது ட்வீட்டில் குறிப்பிட்டுள்ளதாவது, சாம்பியன்ஷிப் பைனல் வென்று சாம்பியன் பட்டத்தை வென்ற ஆஸ்திரேலியா அணிக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இந்திய அணி இந்த இறுதிப்போட்டியில் தோற்றது குறித்தும் ஏமாற்றம் அளிப்பதாக அஷ்வின் தெரிவித்தார்.

அஷ்வின், கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்திய அணியின் கடின முயற்சி மற்றும் சிறப்பாக விளையாடியதன் அடிப்படையில் தான் இந்திய அணி இறுதிப் போட்டி வரை முன்னேறியது. இந்திய அணி இன்று சாம்பியன்ஷிப் பைனலில் தோற்றது ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்களிடையே, ஏமாற்றத்தை அளித்தாலும் பலதரப்பட்ட குழப்பங்களுக்கு மத்தியில், அணியின் சக வீரர்கள் மற்றும் பயிற்சியாளர், ஆதரவளித்த அனைவரும்  கடந்த இரண்டு ஆண்டுகளில் சிறப்பாக பங்காற்றினர் என அஷ்வின் பதிவிட்டார்.

மேலும் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட்டரும், ஜாம்பவானுமான சச்சின் டெண்டுல்கர், சாம்பியன் பட்டம் வென்ற ஆஸ்திரேலிய அணிக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார், மற்றும் இந்திய அணிக்கு சில சமயங்களில் சாதகமான சூழ்நிலை இருந்ததாகவும், ஆஸ்திரேலிய அணியில் 5 இடது கை பேட்டர்கள் இருந்தும், உலகின் நம்பர் 1 டெஸ்ட் பவுலரான அஷ்வினை அணியில் சேர்க்காதது தான் என்னால் புரிந்துகொள்ளமுடியவில்லை என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.</

p>

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்