கலைஞர் கருணாநிதி பெயரில் உலக தரம் வாய்ந்த பாக்சிங் அகாடமி.! தமிழக அரசு நடவடிக்கை.!

கருணாநிதி பெயரில் உலக தரம் வாய்ந்த பாக்சிங் அகாடமி தொடங்க நடவடிகை எடுக்கப்பட்டுள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வரும் , முன்னாள் திமுக தலைவருமான கலைஞர் கருணாநித பெயரில் உலகத்தரம் வாய்ந்த பாக்சிங் அகாடமி தொடங்கபடும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 2022ஆம் ஆண்டு சட்டப்பேரவையில் அறிவித்து இருந்தார்.
இந்நிலையில் தற்போது கோபாலபுரத்தில் உள்ள பாக்சிங் அகடமிக்கு ஒப்பந்த புள்ளியை தமிழக அரசு தற்போது கோரியுள்ளது. இந்த ஒப்பந்தபுள்ளி கோரப்பட்ட பிறகு கலைஞர் கருணாநிதி பெயரில் உலகத்தரம் வாய்ந்த பாக்சிங் அகாடமி துவங்கப்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.