நீட் தேர்ச்சி.! வசதிபடைத்த குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கே வாய்ப்பு.? அன்புமணி ராமதாஸ் விமர்சனம்.!

நீட் தேர்வு என்பது வசதி படைத்தவர்களுக்கே என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சனம் செய்துள்ளார்.
இந்திய அளவில் உள்ள மருத்துவ கல்லூரியில் சேர்வதற்கு நீட் எனும் நுழைவு தேர்வு எழுதி தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என்பது நாம் அறிந்த ஒன்று தான். இந்த நீட் தேர்ச்சி முடிவுகள் அண்மையில் வெளியானது. அதில் தமிழகத்தில் இருந்து பல மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர்.
இந்த நீட் தேர்வு பற்றி பாமக தலைவர் அம்புமணி ராமதாஸ் தனது விமர்சனத்தை முன் வைத்துள்ளார். அதில், நீட் தேர்வில் தேசிய அளவில் முதலிடம் பெற்ற முதல் 50 மாணவர்களில் 39 மாணவர்களின் விவரங்களை தனியார் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் 29 பேர் பொதுப்பிரிவைச் சேர்ந்த உயர்சாதி மாணவர்கள் என்றும், இவர்கள் அனைவருமே நகரப் பகுதிகளை சேர்ந்த, பொருளாதாரத்தில் சற்று உயர்ந்தவர்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
38 பேர் நீட் சிறப்பு பயிற்சி பெற்றவர்கள். 29 பேர் சி.பி.எஸ்.இ. பாடதிட்டத்தில் படித்தவர்கள்.இந்த ஆய்வு அடிப்படையில் பார்த்தல் பொருளாதாரத்தில் வலிமையான குடும்பங்களை சேர்ந்தவர்கள் தான். இதிலிருந்தே, நீட் தேர்வு என்பது நகர்ப்புறங்களைச் சேர்ந்த, தனியார் பயிற்சி மையங்களில் படிக்கும், வசதி படைத்த மாணவர்களுக்கு மட்டுமே என்பதை நம்மால், உணர முடியும் என தனது விமர்சனத்தை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் முன் வைத்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025