ராஷ்மிகாவிடம் ரூ.80 லட்சம் மோசடி செய்த மேனஜர் அதிரடி நீக்கம்…

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வரும் ராஷ்மிகா மந்தனா, தனது நீண்ட நாள் மேலாளரை வேலையில் இருந்து திடீரென நீக்கியுள்ளார். அனுபவம் வாய்ந்த மேலாளர் ஒருவர் நடிகை ராஷ்மிகாவை ஏமாற்றிய செய்தியால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

கன்னடப் படங்களில் அறிமுகமான ராஷ்மிகா மந்தனா, தெலுங்கு சினிமாவில் ‘கீதா கோவிந்தம்’ திரைப்படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ராஷ்மிகா. சமீபத்தில் நடிகர் விஜய்யுடன் இணைந்து வாரிசு திரைப்படத்தில் நடித்திருந்தார்.

நடிகை ராஷ்மிகா மந்தனாவிடம் சுமார் ரூ.80 லட்சம் அளவுக்கு அவரது மேலாளர் மோசடி செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில், அவரது நீண்ட கால மேனேஜரை வேலையை விட்டு நீக்கியதாக கூறப்படுகிறது.

ராஷ்மிகா வளர்ந்து வரும் நடிகையாக இருந்த காலத்திலிருந்தே அவருக்கும் அதே மேலாளர் இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால். சமீபகாலமாக அந்த நபர் ராஷ்மிகாவிடம் இருந்து கிட்டத்தட்ட 80 லட்சம் முதல் ஒரு கோடி ரூபாய் வரை மோசடியில் ஈடுபட்டதாக தெரிய வந்தது. இந்நிலையில், அந்த நபரை சத்தமில்லாமல் நீக்கிவிட்டு இப்போது தானே தனது தேதிகளை கவனித்து வருகிறாராம்.

லேட்டஸ்ட் செய்திகள்
நடிகை சரோஜா தேவி காலமானார்! சோகத்தில் ரசிகர்கள்!
July 14, 2025
“கணவரைப் பிரிந்து வாழ முடிவு செய்துள்ளேன்”…வேதனையில் பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவால்!
July 14, 2025
தூக்குத் தண்டனை விவகாரம் : ஏமனில் கேரள நர்ஸ் பிழைப்பாரா? மனுவை விசாரிக்கும் உச்சநீதிமன்றம்!
July 14, 2025
உக்ரைனுக்கு ஏவுகணை கொடுப்போம்..ஆனா செலவு அமெரிக்கா ஏற்காது! டொனால்ட் டிரம்ப் திட்டவட்டம்!
July 14, 2025