இன்று பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும் …. 4 மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு.!

Schools noleave

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளிகள் இன்று வழக்கம் போல் இயங்கும் என 4 மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு.

தமிழகத்தின் சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் நேற்று முன்தினம் இரவு முதல் மழை பெய்துவந்ததன் காரணமாக நேற்று சென்னை, காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அறிவித்தனர்.

இன்னும் 5 நாட்களுக்கு தமிழகத்தில் சில பகுதிகளில் மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் அறிவித்துள்ளது, இருந்த போதிலும் மழை குறைந்துள்ளதால் இன்று சென்னையில் அனைத்து பள்ளிகளும் வழக்கம் போல் இயங்கும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார், இதேபோல் காஞ்சிபுரம் மாவட்டத்திலும் பள்ளிகள் இன்று இயக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

சென்னை, காஞ்சிபுரத்தை அடுத்து திருவள்ளூர், செங்கல்பட்டிலும் இன்று கல்வி நிலையங்கள் வழக்கம் போல் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்