இன்று அமெரிக்கா புறப்படும் பிரதமர் மோடி.! வெள்ளை மாளிகை விருந்து.. ஐநாவில் யோகா தின சிறப்பு நிகழ்ச்சி…

அரசு முறை பயணமாக இன்று பிரதமர் மோடி அமெரிக்கா புறப்படுகிறார்.
பிரதமர் நரேந்திர மோடி அரசு முறை பயணமாக இன்று அமெரிக்கா புறப்பட உள்ளார். இந்த பயணத்தின் போது அமெரிக்க அதிபருடன் சந்திப்பு , அவரது வீட்டில் விருந்து, ஐநா சபையில் சர்வதேச யோகா தின சிறப்பு விழா என பல்வேறு நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி கலந்து கொள்ள உள்ளார்.
அடுத்ததாக நாளை இரவு வெள்ளை மாளிகையில் சிறப்பு விருந்தில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். அதில் சுமார் 7000க்கும் மேற்பட்ட இந்திய வம்சாவளியினர் பங்கேற்ற உள்ளனர்.
இதனை தொடர்ந்து 23ஆம் தேதி இந்திய வம்சாவழியினர் பங்கேற்கும் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். இந்த பயணத்தின் போது இந்தியா அமெரிக்கா இடையிலான நல்லுறவையும் மேம்படுத்தும் விதமாக இருநாட்டு பாதுகாப்பு சார்ந்த விஷயங்கள், தொழில் முதலீடு, தொழில்நுட்ப பரிமாற்றம், விண்வெளி ஆகியவை குறித்து ஆலோசனை நடத்தப்படும் என மத்திய வெளியுறவுத் துறை தகவல் தெரிவித்துள்ளது.
மேலும், இந்த பயணத்தின் போது போர் விமானங்கள் தயாரிப்பு தொடர்பான அதன் இன்ஜின்களை இந்தியாவில் தயாரிப்பதற்கான ஒப்பந்தங்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. இதன் மூலம் இந்தியாவில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்த தொழில் முதலீட்டாளர்களை சந்தித்து பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளார். இதில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.