நான் மோடியின்ரசிகன்.. நிச்சயம் இந்தியா வருவேன்.! பிரதமர் மோடியை சந்திந்தப்பின் எலான் மஸ்க் பேச்சு.!

நான் மோடியின்ரசிகன். நிச்சயம் இந்தியா வருவேன் என பிரதமர் மோடியை சந்திந்த பிறகு எலான் மஸ்க் கூறியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி நான்கு நாள் அரசு முறை சுற்றுப்பயணமாக அமெரிக்கா சென்று உள்ளார். அங்கு அவர் அதிபர் ஜோ பைடனை சந்திக்க உள்ளார். அதன் பிறகு இந்தியா – அமெரிக்கா இடையே வர்த்தகம், பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளது. பின்னர் அமெரிக்க நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார். பின்னர் இந்திய வம்சாவளியினர் உடனான சிறப்பு விருந்தில் அவர் கலந்து கொள்ள உள்ளார்.
மேலும், பல்வேறு உலக தொழிலதிபர்களை சந்தித்து, இந்தியாவில் தொழில் தொடங்குவதற்கான முன்னேற்பாடுகளை பிரதமர் மோடி மேற்கொள்ள உள்ளார். அதன் ஒரு நிகழ்வாக டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலான் வஸ்கை பிரதமர் மோடி சந்தித்தார். இந்த சந்திப்பு குறித்து எலான் மஸ்க் மிகவும் உற்சாகத்துடன் பேசினார்.
அவர் கூறுகையில், நான் மோடியின் ரசிகன். இந்த சந்திப்பு ஒரு அருமையாக சந்திப்பு . எனக்கு அவரை மிகவும் பிடிக்கும். அவர் இந்தியாவிற்காக சரியான விஷயங்களை செய்வதற்கு ஆசைப்படுகிறார் என்று என்னால் கூற முடியும். அவர் எப்போதும் வெளிப்படையாக இருக்க விரும்புகிறார்.
அடுத்த ஆண்டு நான் இந்தியாவுக்கு செல்ல திட்டமிட்டு உள்ளேன். ஸ்டார்லிங்கை இந்தியாவுக்கு கொண்டுவர ஆவலுடன் காத்திருக்கிறேன். ஸ்டார்லிங்க் இணைப்பானது தொலைதூரம் மற்றும் கிராமப்புற பகுதிகளுக்கு நம்ப முடியாத அளவிற்கு உதவியாக இருக்கும் என நினைக்கிறேன் எனவும் பிரதமர் மோடியுடனான சந்திப்புக்கு பின்னர் எலான் மஸ்க் தெரிவித்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025