பால் கொள்முதல் 30 லட்சம் லிட்டராக உயர்வு.! அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி.!

தமிழகத்தில் பால் கொள்முதல் நாள் ஒன்றுக்கு 30.80 லட்சம் லிட்டராக உயர்ந்துள்ளது என பால்வளதுறை அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டியளித்தார்.
தமிழ்நாட்டு பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து ஆவின் தொடர்பாக பல்வேறு தகவல்களை குறிப்பிட்டு பேசினார். அவர் தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு பால் கொள்முதல் உயர்ந்துள்ளதை குறிப்பிட்டு பேசினார் .
அதில், ஏப்ரல் மாதம் கணக்கீட்டின் படி, ஆவின் பால் கொள்முதல் நாள் ஒன்றுக்கு 27.08 லட்சம் லிட்டராக இருந்தது. இந்த பால் கொள்முதல் மே மாத கணக்கீட்டின் படி 30.80 லிட்டராக உயர்ந்துள்ளது. மேலும் தற்போது சென்னையில் மட்டும் 80 ஆயிரம் லிட்டர் பால் விநியோகம் செய்யப்படுகிறது என குறிப்பிட்டு பேசினார்.
மேலும், விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான விரைவான தார சான்று விலை நிர்ணயம் கோரிக்கை தற்போது நிறைவேற்றப்பட்டு வருகிறது. எங்கு கொள்முதல் நடைபெறுகிறதோ அங்கேயே பால் தரம் பார்க்கப்பட்டு, விலை நிர்ணயம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது என குறிப்பிட்டார். மிக விரைவில் ஆவின் சிறந்த நிறுவனமாக வளரும் என்றும் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் குறிப்பிட்டு பேசினார்.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025