பாசிசத்தை முடிவுக்கு கொண்டு வர போர் முழக்கம் துவக்கம்.! பீகாரில் இருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவீட்.!

பாசிசத்தை முடிவுக்கு கொண்டு வர போர் முழக்கம் துவங்கியது என முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவீட் செய்துள்ளார்.
பீகார் முதல்வரும் ஜனதா ஜன கட்சி தலைவருமான நிதிஷ்குமார் தலைமையில் இன்று பாட்னாவில் எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெறுகிறது. இதில், காங்கிரஸ், திமுக உள்ளிட்ட பாஜாவுக்கு எதிரான நிலைப்பாடு கொண்டுள்ள பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளனர்.
இதில் திமுக சார்பில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ள உள்ளார். நேற்று மாலை அவர் தனி விமானம் மூலம் பாட்னா புறப்பட்டார். அங்கு சென்ற பின்னர் தனது டிவிட்டர் பக்கத்தில் இது குறித்து டிவீட் ஒன்றை பதிவு செய்து இருந்தார்.
அதில், நான் பாட்னா வந்தடைந்து விட்டேன். பீகார் முதல்வர் நிதீஷ் குமார் மற்றும் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் ஆகியோரிடம் இருந்து நல்ல வரவேற்பை பெற்றேன். பீகார் தமிழ் சங்கத்தினர் தனக்கு பீகார் மண்ணில் வழங்கிய வரவேற்பு மகிழ்ச்சி அளித்தது.
பாசிச எதேச்சிகார அதிகாரம் கொண்ட ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்து மதச்சார்பற்ற ஜனநாயக இந்தியாவை உருவாக்க சமூக நீதியின் பூமியான இங்கிருந்து எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து போர் முழக்கத்தை தொடங்கியுள்ளோம் என தனது டிவிட்டர் பக்கத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
I have arrived at Patna and received a warm welcome from Hon’ble Chief Minister of Bihar Thiru @NitishKumar, Hon’ble Deputy Chief Minister of Bihar Thiru @yadavtejashwi and IAS officers from Bihar Tamil Sangam here. Feeling elated to be in the land that has given us the likes of… pic.twitter.com/Bsooj0uv73
— M.K.Stalin (@mkstalin) June 22, 2023