தொழில்நுட்பக்கோளாறு… அந்தமான் செல்லும் ஏர் இந்தியா விமானம் ரத்து.!

சென்னையிலிருந்து அந்தமான் செல்ல இருந்த ஏர் இந்தியா விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
சென்னை விமான நிலையத்திலிருந்து இன்று காலை 5 மணிக்கு 122 பயணிகளுடன் அந்தமானுக்கு புறப்பட தயாராக இருந்த ஏர் இந்தியா விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனர். விமானத்தில் ஏற்பட்ட தொழிலுட்பக்கோளாறு கண்டறியப்பட்டதன் காரணமாக இன்று காலை அந்தமானுக்கு புறப்பட இருந்த விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
மேலும் பயணிகளுக்கு இதற்கு பதிலாக மாற்று விமானம் இன்னும் ஏற்பாடு செய்யப்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. 122 பயணிகளும் அந்தமானுக்கு சுற்றுலா செல்ல திட்டமிட்டிருந்த நிலையில், விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதால் பயணிகள் மிகுந்த ஏமாற்றமடைந்துள்ளனர். நாளை பயணிகளுக்கான விமான டிக்கெட்டிற்கான பணம் திருப்பி தரப்படும் என்று கூறப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025