கலைஞர் நூற்றாண்டு விழா.! 100 இடங்களில் மருத்துவ முகாம்.!

கலைஞர் நூற்றாண்டு நிகழ்வை முன்னிட்டு இன்று தமிழகம் முழுவதும் 100 இடங்களில் மருத்துவ முகாம் நடத்தப்பட உள்ளது.
மறைந்த முன்னாள் தமிழக முதல்வரும், முன்னாள் திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா இந்தாண்டு முழுவதும் திமுகவினரால் கொண்டாடப்பட்டு வருகிறது. ஏற்கனவே கிண்டி பல்நோக்கு மருத்துவமனை, திருவாரூர் கலைஞர் கோட்டம் ஆகியவை கலைஞர் பெயரில் திறக்கப்பட்டன.
இன்று மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் தமிழகம் முழுவதும் 100 இடங்களில் மெகா மருத்துவ முகாம்கள் நடைபெறுகிறது. பொது அறுவை சிகிச்சை, இதய மருத்துவம், இசிஜி, சிறுநீரக பரிசோதனை, கண், காது , மூக்கு, தொண்டை, பல், எலும்பு, மூட்டு பிரச்சனை உள்ளிட்ட பல வகையான மருத்துவ பரிசோதனை செய்யப்பட உள்ளது. தமிழகத்தில் பல்வேறு பகுதியில் உள்ளவர்கள் அவர்கள் அருகில் உள்ள மருத்துவ முகாம்களுக்கு சென்று பயன்பெறலாம்.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025