காவல்துறை அதிகாரியான விஜயகுமாரின் இழப்பு வேதனை அளிக்கிறது – ஆளுநர்

டிஐஜி விஜயகுமாரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல் என தமிழ்நாடு ஆளுநர் பதிவு.
கோவை சரக டிஐஜி விஜயகுமார் இன்று காலை முகாம் அலுவலகத்தில் தனது பாதுகாவலரிடம் துப்பாக்கியை வாங்கி தன்னை தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. துணிச்சல் மிக்க நேர்மையான ஒரு அதிகாரி தற்கொலை செய்துகொண்டுது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மன அழுத்தத்தால் தான் டிஐஜி விஜயகுமார் தற்கொலை செய்துகொண்டார் என தகவல் கூறப்படுகிறது.
இவரது மறைவிற்கு முதலமைச்சர் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், காவல்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், காவல்துறை அதிகாரியான விஜயகுமாரின் இழப்பு வேதனை அளிக்கிறது என்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்என் ரவி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ஆளுநர் மாளிகை ட்விட்டர் பதிவில், இளம், புத்தி கூர்மைமிகு அதிகாரி விஜயகுமாரின் மறைவு செய்தி அறிந்து வேதனை அடைகிறேன். டிஐஜி விஜயகுமாரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல், ஓம் சாந்தி என தெரிவித்துள்ளார்.
இதனிடையே, டிஐஜி விஜயகுமார் தற்கொலைக்கான காரணம் குறித்து தற்போது காவல்துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவை மருத்துவமனையில் உடற்கூறாய்வு முடிந்த நிலையில், விஜயகுமாரின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. கோவை சரக டிஐஜி விஜயகுமார் அவர்களின் இறுதி சடங்கு தேனியில் வைத்து நடைபெற உள்ளது . அவரது இறுதி சடங்கில் கலந்து கொள்வதற்காக தமிழக டிஜிபி செல்லவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
It is painful for me to learn of the loss of a young and brilliant police officer, C. Vijayakumar. My deepest condolences to his bereaved family.
Om Shanti! pic.twitter.com/XIMerFpYZz— RAJ BHAVAN, TAMIL NADU (@rajbhavan_tn) July 7, 2023