அமைச்சர் அன்பில் மகேசுக்கு எனது பாராட்டுக்கள்.! முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு டிவீட்.!

Minister Anbil Mahesh - TN CM MK Stalin

பள்ளிக்கல்வித்துறை மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் இணைந்து ஒப்பந்தம் போடப்பட்டதற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டுகளை தெரிவித்துள்ளர்.

TEALS(Technical Education And Learning Support) எனும் திட்டத்தை செயல்படுத்தும் நோக்கில் கல்வி மேம்பாட்டிற்காக மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் அமைச்சர் அன்பில் மகேஷ் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.

இதுகுறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி தொடர் முயற்சிகளின் பலனாக இந்தியாவிலேயே முதன்முறையாக கல்வி மேம்பாட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மைக்ரோசாப்ட்  நிறுவனத்துடன் இணைந்து கையெழுத்திட்டுள்ளோம்.

தமிழ்நாட்டின் கிராம பகுதிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு அனைத்து தொழில்நுட்பம் சார்ந்த புரிதலும் சென்றடையும் வகையில் TEALS என்னு திட்டம் திட்டம் செயல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்து இருந்தது. அதில் முதல்கட்டமாக 13 பள்ளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு 3800 மாணவர்கள் பயன்பெறும் வகையில் TEALS திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தனது டிவிட்டர் பக்கத்தில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி தொடர் முயற்சிகளின் பலனாக இந்தியாவிலேயே முதன்முறையாக கல்வி மேம்பாட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் இணைந்து கையெழுத்திடப்பட்டுள்ளது என அதில் அமைச்சர் அன்பில் மகேஷ் பாத்திட்டு இருந்தார்.

இதனை குறிப்பிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில், தம்பி மாண்புமிகு அன்பில் மகேஷ் அவர்கள் அமெரிக்கப் பயணத்தின்போது, ஊரகப் பகுதி மாணவர்களுக்கு உலகத்தரத்திலான தொழில்நுட்பக் கல்வி அறிமுகத்தை வழங்க மைக்ரோசாப்ட் உடன் இணைந்து தமிழக பள்ளிக்கல்வித்துறை மேற்கொள்ளும் முன்முயற்சிகளைப் பற்றி என்னிடம் தொலைபேசியில் தெரிவித்தார். தமிழர்களின் இதயத்துடிப்பான கல்வியை உலகத்தரத்திற்கு உயர்த்துவதே நமது திராவிட மாடல் அரசின் இலக்கு. அதற்கான பணிகளில் ஈடுபடும் மாண்புமிகு அமைச்சர் அவர்களுக்கும் அதிகாரிகளுக்கும் என்னுடைய பாராட்டுகள்! கல்வியிற்சிறந்த தமிழரெனப் பார் போற்ற பாடுபடுவோம் என தனது டிவிட்டர் பக்கத்தில் அமைச்சர் அன்பில் மகேஷுக்கு தனது வாழ்த்துக்களை பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்