இஸ்லாமிய அரசுத் தலைவரை சுட்டுக்கொன்ற அமெரிக்க ட்ரோன் விமானங்கள்..!

சிரியாவில் இஸ்லாமிய அரசுத் தலைவர் அமெரிக்க ட்ரோன் விமான தாக்குதலில் உயிரிழந்துள்ளார்.
சிரியாவின் அலெப்போ பகுதியில் அமெரிக்க ட்ரோன் விமானத் தாக்குதலில் உசாமா அல்-முஹாஜிர் என்ற இஸ்லாமிய அரசுத் தலைவர் (ISIS) உயிரிழந்துள்ளதாக அமெரிக்க பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.
மூன்று MQ-9 ரீப்பர் ட்ரோன்கள் தீவிரவாதிகளை தேடி பறந்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. சிறிது நேரத்திற்குப் பிறகு, அலெப்போ பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த உசாமா அல்-முஹாஜிர் என்ற இஸ்லாமிய அரசுத் தலைவர் மீது ட்ரோன்கள் தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்த தாக்குதலில் அவர் உயிரிழந்துள்ளதாக அமெரிக்க பாதுகாப்புத் துறை உறுதிப்படுத்தியுள்ளது. மேலும், இந்த தாக்குதலில் பொதுமக்கள் யாரும் கொல்லப்பட்டதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை எனவும் தெரிவித்துள்ளது.