இது இலவசமல்ல.. உங்கள் கல்விக்கான உரிமை.! மிதிவண்டி வழங்கும் விழாவில் அமைச்சர் உதயநிதி பேச்சு.!

இன்று சென்னை சேப்பாக்கத்தில் இலவச மிதிவண்டி வழங்கும் விழாவில் அமைச்சர் உதயநிதி மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கினார்.
இன்று சென்னை சேப்பாக்கத்தில் அரசு விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டம் மூலம் அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளில் பயிலும் 11ஆம் வகுப்பு மாணவ மாணவியருக்கு மிதிவண்டி வழங்கும் துவக்க விழா நடைப்பெற்றது. இந்த விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு இந்த திட்டத்தை துவங்கி வைத்தார்.
அந்த விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், தமிழக அரசு இந்தாண்டு சுமார் 5 லட்சம் மாணவ மாணவிகளுக்கு 234 கோடி செலவில் விலையில்லா மிதிவண்டிகளை வழங்குகிறது. வருடந்தோரும் இலவசமாக இந்த மிதிவண்டிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இன்று சேப்பாக்கம் தொகுதியில் மட்டும் 400 மாணவர்களுக்கு இலவச மிதிவண்டி கொடுத்து இந்த திட்டம் துவங்கிவைக்கப்பட்டுள்ளது. இன்று முதல் தமிழகம் முழுவதும் அனைத்து பகுதிகளிலும் மாணவர்களுக்கு இலவச மிதிவண்டி வழங்கபட உள்ளது. என பேசினார்.
மேலும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், மாணவர்களுக்கு இது இலவச மிதிவண்டி கிடையாது. இது அவர்கள் கல்விக்கான உரிமை. மாணவர்கள் தங்கள் படிப்பில் முழு கவனம் செலுத்த வேண்டும் எனவும் தனது உரையில் அமைச்சர் உதயநிதி குறிப்பிட்டு பேசினார்.
லேட்டஸ்ட் செய்திகள்
மகளிர் உரிமைத்தொகை பெற நாளை முதல் விண்ணப்பம்!
July 6, 2025