ஜோ பிடன் ஊழல்வாதி, சீனாவில் இருந்து மில்லியன் கணக்கில் பணம் வாங்கியதாக டிரம்ப் குற்றச்சாட்டு.!

trump BidenCorrupt

பொதுக்கூட்டத்தில் பேசிய முன்னாள் அமெரிக்க அதிபர் டிரம்ப், அதிபர் பைடனை ஊழல்வாதி எனக் குறிப்பிட்டுள்ளார்.

லாஸ் வேகாஸ் நகரில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், தற்போதைய அதிபர் ஜோ பைடன் ஒரு ஊழல்வாதி மற்றும் திறமையற்ற தலைவராக இருக்கிறார் எனக் குற்றம் சாட்டியுள்ளார். சீனா போன்ற நாடுகளிலிருந்து அவர் மில்லியன் கணக்கான டாலர்களைப் பெற்றுள்ளார் எனவும் டிரம்ப், பைடன் மீது குற்றம் சுமத்தியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் லாஸ் வேகாஸில் ஆற்றிய உரையில், அதிபர் பைடனுக்கு எதிராக சரமாரியான விமர்சனங்களை அடுக்கினார். அப்போது பேசிய டிரம்ப், பொருளாதாரம் முதல் ஊழல் மற்றும் தேர்தல் மோசடிகள் என பைடன் மீதான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

அவர் மகன் ஹண்டர் பைடன் மூலம் சீனா போன்ற நாடுகளில் இருந்து மில்லியன் கணக்கான வணிக பரிவர்த்தனைகளை மேற்கொண்டதால் நேரடியாக பைடனின் பெயர் சிக்கவில்லை என்பதை டிரம்ப் கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்