இந்த இயற்கை பேரிடரின் கடினமான சவாலை நாம் அனைவரும் ஒன்றிணைந்து எதிர்கொள்ளவோம் – ராகுல் காந்தி

Rahulgandhi, Former Congress president

அனைத்து காங்கிரஸ் தொண்டர்களும் நிவாரணப் பணிகளில் நிர்வாகத்திற்கு உதவுமாறு ராகுல் காந்தி வேண்டுகோள்.

இமாச்சலப் பிரதேசம், உத்தரகண்ட் மற்றும் வட மாநிலங்களில் பெய்து வரும் கனமழையால், போன்ற மாநிலங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், அங்குள்ள மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். மேலும் பலர் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில், ராகுல் காந்தி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், இமாச்சலப் பிரதேசம், உத்தரகண்ட் மற்றும் பிற வட இந்திய மாநிலங்களில் கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக ஏற்பட்ட உயிர் இழப்புகள் குறித்த செய்தி மிகவும் வருத்தமளிக்கிறது. குடும்ப நபர்களை இழந்து வாடும் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதுடன் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என்று விரும்புகிறேன்.

அனைத்து காங்கிரஸ் தொண்டர்களும் நிவாரணப் பணிகளில் நிர்வாகத்திற்கு உதவுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த இயற்கை பேரிடரின் கடினமான சவாலை நாம் அனைவரும் ஒன்றிணைந்து எதிர்கொள்ளவோம் என வலியுறுத்தியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்