ரூ.2000 நோட்டு தொடர்பான வழக்கு – தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு!

பாஜகவை சேர்ந்த மூத்த வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாயா தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்.

Supreme court of India

பாஜகவை சேர்ந்த மூத்த வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாயா தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்.

இந்திய ரிசர்வ் வங்கி ரூ.2,000 நோட்டுகளை வாபஸ் பெறுவதாக அறிவித்ததும், புழக்கத்தில் இருந்த நோட்டுகளில் சுமார் 75% திரும்பப் பெறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. ரூ.2000 நோட்டுகளை மாற்ற செப்டம்பர் 30-ம் தேதி வரை, அதாவது 4 மாதங்கள் ரிசர்வ் வங்கி அவகாசம் வழங்கியுள்ளது. வங்கி மூலம் ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ள சில வரம்புகள் அறிவிக்கப்பட்டது.

அதன்படி, நபர் ஒருவர் வங்கிகள் மூலம் நாளொன்றுக்கு ரூ.20 ஆயிரம் வரையில் மட்டுமே ரூ.2000 நோட்டுகளை மாற்ற முடியும். மேலும், ஆவணமின்றி ரூ.2,000 நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடுக்கப்பட்டது.

இந்த நிலையில், ரூ.2,000 மாற்ற ஆதார், பான் உள்ளிட்ட அடையாள அட்டை கட்டாயம் என உத்தரவிடக்கோரிய வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. பாஜகவை சேர்ந்த மூத்த வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாயா தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம். அரசின் கொள்கை முடிவில் உச்சநீதிமன்றம் தலையிட முடியாது என கூறி மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது.