50வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்.. ஸ்பெஷல் வீடியோ முதல் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு 28% வரிவிதிப்பு வரை.

50வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் நேற்று பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டு அதன் மீதான பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒவ்வொரு விதமாக வரிகள் விதிக்கப்பட்டு இருந்த நிலையில் ஒரே நாடு ஒரே வரி திட்டத்தின் கீழ் 2017 ஆம் ஆண்டு ஜிஎஸ்டி (GST) எனும் சரக்கு மற்றும் சேவை வரி நாடு முழுவதும் ஒரே மாதிரியாக அமல்படுத்தப்பட்டது. இந்த ஜிஎஸ்டி வரி அமல்படுத்தப்பட்டு 6 ஆண்டுகள் நிறைவடைந்து உள்ளது. இந்த ஜிஎஸ்டி வரிகள் விதிப்பு, வரிகள் குறைப்பு பற்றி ஆலோசிக்க மாதந்தோறும் மத்திய நிதி அமைச்சர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெறும். இந்த ஆலோசனை கூட்டத்தில் ஒவ்வொரு மாநிலத்தின் நிதி அமைச்சர் அல்லது அவரது பிரதிநிதிகள் மற்றும் நிதித்துறை அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொள்வார்கள். இதில் வரியில் மாற்றம் செய்வது தொடர்பாக விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டு அதன் மூலம் முடிவுகள் எடுக்கப்படும். இந்த முடிவுகள் மத்திய அரசு தெரிவிக்கப்பட்டு அதன் பிறகு, மத்திய அரசால் நடைமுறைப்படுத்தப்படும்.
50வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் :
இதன்படி நேற்று ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் துவங்கியது. இதில் தமிழகத்தின் சார்பில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கலந்து கொண்டார். இந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டமானது 50 ஆவது ஆலோசனைகூட்டம் ஆகும். ஆதலால் நேற்று இதற்கான சிறப்பு வீடியோவை மத்திய நிதியமைச்சகம் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருந்தது. மேலும், 50வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தை சிறப்பிக்கும் வகையில் சிறப்பு கவர் மற்றும் அதற்கான சிறப்பு ஸ்டாம்ப் வெளியிடப்பட்டது. இந்த சிறப்பு தபால் தலையை டெல்லி தலைமை போஸ்ட் மாஸ்டர் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கொடுத்தார். அதன்பிறகு ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் தொடங்கியது. அதில் பல்வேறு முக்கிய விவகாரங்கள் விவாதிக்கப்பட்டன.
- ஆன்லைன் விளையாட்டுக்கள் (ரம்மி உள்ளிட்டவை), கேசினோக்கல் மற்றும் குதிரை பந்தயம் ஆகியவற்றுக்கு 28 சதவீதம் வரி விதிக்க ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரை செய்துள்ளது.
- கேன்சர் மருந்து மற்றும் அரிய நோய்களுக்கான சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் சிறப்பு மருந்துகளுக்கு ஜிஎஸ்டி வரிகளில் இருந்து விலக்கு அளிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
- செயற்கைக்கோள் தயாரிப்பு பணியில் ஈடுபடும் தனியார் நிறுவனங்களின் சேவைகளுக்கு ஜிஎஸ்டி கவுன்சில் வரி விலக்கு அளிக்க பரிந்துரைத்துள்ளது.
- சமைக்கப்படாத வத்தல் மீதான வரி 18 சதவீதத்திலிருந்து ஐந்து சதவீதமாக குறைக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
- மீன் பேஸ்ட் மீதான ஜிஎஸ்டி வரி 18 சதவீதத்திலிருந்து 5% குறைக்கப்பட்டுள்ளது.
- ஆடைகளில் பயன்படுத்தப்படும் ஜரிகை நூல் மீதான வரி 12 சதவீதத்திலிருந்து 5% குறைக்கப்பட பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
- ஸ்டீல் மீதான குறிப்பிட்ட வரி 12 சதவீதத்திலிருந்து 5% குறைக்கப்பட்டுள்ளது.
- சினிமா தியேட்டரில் வைக்கப்படும் உணவு மற்றும் குளிர்பானங்களின் வரிகள் 18% இருந்து 5% குறைக்கப்பட பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
தமிழக அரசு வைத்த கோரிக்கைகள் :
இந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் தமிழக சார்பில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து உள்ளார். இதில், ஏற்கனவே தமிழக அரசு ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதித்து அதனை முறைப்படுத்த சட்டம் இயற்றியுள்ளது. எனவே தற்போது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு வரி விதிப்பதன் மூலமாக ஆன்லைன் தடை சட்டத்திற்கு முரணாக இந்த பரிந்துரை அமைந்துவிட கூடாது என வலியுறுத்தினார்.
புற்றுநோய்க்கான விலை உயர்ந்த மருந்தின் மீதான வரி விலக்கு பரிந்துரைக்கு தமிழக அரசு தனது ஆதரவை தெரிவிக்கிறது என்றும். அரிய வகை நோய்களுக்கு பயன்படுத்தப்படும் மருந்துகளுக்கு வரி விலக்கு அளித்து இருப்பதற்கும் தமிழக அரசு ஆதரவை தெரிவிப்பதாக தங்கம் தென்னரசு 50வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டமத்தில் குறிப்பிட்டார்.
Watch the short film “GST Council – 50 steps towards a journey” released on the occasion of 50th meeting of the GST Council today. ???? pic.twitter.com/HY9Y9AzgvZ
— Ministry of Finance (@FinMinIndia) July 11, 2023
லேட்டஸ்ட் செய்திகள்
கங்கைகொண்ட சோழீஸ்வரரை தரிசனம் செய்த பிரதமர் மோடி.!
July 27, 2025
வழிநெடுக தூவப்பட்ட மலர்கள்.., சோழபுரத்தில் மோடி சாலைவலம்..! பொதுமக்கள் உற்சாக வரவேற்பு.!
July 27, 2025
மேட்டூர் அணையில் அதிகரிக்கும் நீர்வரத்து : காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.!
July 27, 2025
கங்கைகொண்ட சோழபுரத்தில் வந்திறங்கிய பிரதமர் மோடி.!
July 27, 2025