உண்மையான பிரச்சனை விண்கலம் தரையிறங்குவதில்தான்; முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி.!

Nambi Narayan Chand-3

சந்திராயன்-3 விண்கலத்திற்கு உண்மையான பிரச்சனை, தரையிறங்குவதில் தான் என முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி தகவல்.

சந்திராயன்-3 விண்கலத்தை நிலவிற்கு ஆய்வு செய்ய, இந்தியா இன்று இன்னும் சற்று நேரத்தில் அதாவது 2.35 மணிக்கு விண்ணில் செலுத்துகிறது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிக்கோட்டாவில் உள்ள சதிஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இதன்மூலம் நிலவிற்கு மூன்றாவது முறையாக இந்தியா விண்கலத்தை அனுப்புகிறது.

இந்தியாவின் இந்த வரலாற்று புகழ்மிக்க நிகழ்வுக்கு முன்பாக, இஸ்ரோவின் முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணன், தனியார் செய்திக்கு(டைம்ஸ் நவ்) அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது, சந்திராயன்-3 விண்கலம் இன்று விண்ணில் செலுத்தப்படஉள்ளநிலையில், இது ஆகஸ்ட் 23 அல்லது 24 ஆம் தேதி நிலவில் தரையிறங்கும் என நினைக்கிறேன், அப்போது தான் உண்மையான பிரச்சனை தொடங்கும்.

அதாவது நிலவில் விண்கலம் தரையிறங்கும் போது சாஃப்ட் லேண்டிங் என்பது முக்கிய நிகழ்வாகக் கருதப்படுகிறது. அதாவது விண்கலம் நிலவின் மேற்பரப்பில் தரையிறங்குவதில் தான் சந்திராயன்-3க்கு உண்மையான பிரச்சனையாக இருக்கும், கடந்த முறை தரையிறங்குவதில் தான் நாம் தோல்வியடைந்தோம், ஆனால் இம்முறை தரையிறங்குவதில் சந்திராயன்-3இல் அதுபோன்று பிரச்சனை ஏதும் நிகழ வாய்ப்பில்லை என அவர் கூறியிருக்கிறார்.

சாஃப்ட் லேண்டிங்(தரையிறங்குவதில்) விண்கலம் தரையிறங்குவதில் உள்ள பிரச்சனைகள் சரி செய்யப்பட்டு சந்திராயன்-3 வடிவமைக்கப்பட்டுள்ளதாக முன்னாள் இஸ்ரோவின் விஞ்ஞானி நம்பி நாராயணன் மேலும் தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்