மதுரையில் ஆகஸ்ட் 20ம் தேதி நடைபெறும் மாநாட்டில் கலந்துகொள்ள அதிமுக கட்சி நிர்வாகிகளுக்கு பொதுச்செயலாளர் இபிஎஸ் அழைப்பு விடுத்துள்ளார்.
இது பற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மதுரை மாநாடு திருப்புமுனையை ஏற்படுத்தும் நோக்கில் புதுடெல்லி, அந்தமான் உள்ளிட்ட பிற மாநிலங்களைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும், குடும்பம் குடும்பமாக வந்து கலந்துகொள்ள வேண்டும்” என அறிவுறுத்தியுள்ளார்.
மேலும் அதில், கழகத்தை பலவீனப்படுத்த வேண்டும் என்ற தீய நோக்கத்தில் தரப்படும் பல்வேறு சோதனைகளையும், துரோகங்களையும், கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள் மற்றும் கோடானு கோடி தொண்டர்களாகிய உங்களின் நல்லாதரவோடும் முறியடித்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் பொறுப்பினை ஏற்று, கழகம் மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமர வேண்டும் என்ற ஒரே லட்சிய இலக்கோடு நான் பணியாற்றி வருகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
unknown node