பில்கிஸ் பானோ வழக்கு – ஆக.7ம் தேதி இறுதி விசாரணை.. உச்ச நீதிமன்றம் அறிவிப்பு!

Bilkis Bano case

பில்கிஸ் பானோ வழக்கில் ஆகஸ்ட் 7ம் தேதி இறுதி விசாரணை நடைபெறும் என உச்ச நீதிமன்றம் அறிவிப்பு.

பில்கிஸ் பானோ கூட்டு பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் குற்றவாளிகள் 11 பேரை குஜராத் அரசு முன்கூட்டியே விடுதலை செய்ததற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், ஆகஸ்ட் 7ம் தேதி இறுதி விசாரணை நடைபெறும் என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. கடந்த 2002-ஆம் ஆண்டில் குஜராத் மாநிலத்தில் கோத்ரா கலவரத்தின் போது, பில்கிஸ் பானுவை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து அவரது குழந்தை உள்பட 7 உறவினா்கள் கொலை செய்யப்பட்டனா்.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 11 பேருக்கு கடந்த 2008ம் ஆண்டு சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. அந்தவகையில் கடந்த 15 ஆண்டுகளாக கோத்ரா சிறையில் அடைக்கப்பட்டிருந்த 11 குற்றவாளிகளின் தண்டனை குறித்து மாநில அரசு முடிவு எடுக்கலாம் என உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி 11 பேரையும் விடுவித்தது குஜராத் அரசு.

குற்றவாளிகள் 11 பேர் முன்கூட்டியே விடுதலை செயய்யப்பட்டதுக்கு பல எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், இந்த விடுதலையை எதிர்த்து பில்கிஸ் பானு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் தொடர்ந்து இருந்தார். தண்டனைக்கு முன்னதாக விடுதலை செய்யப்பட்டது தொடர்பாகவும் மனு தொடர்ந்திருந்தார். மேலும், ஒருசிலர் மனு தாக்கல் செய்திருந்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், பில்கிஸ் பானோ கூட்டுப் பலாத்கார வழக்கில் 11 குற்றவாளிகளுக்கும் வழங்கப்பட்ட விடுதலையை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்கள் மீதான இறுதி விசாரணை ஆகஸ்ட் 7-ஆம் தேதி நடைபெறும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. விடுதலை செய்யப்பட்ட அனைத்து குற்றவாளிகளுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும், விசாரணையை மேலும் ஒத்திவைக்க மாட்டோம் என்பதை உறுதி செய்து, சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் தங்கள் பதில்களை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் அறிவுறுத்தியது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்