புயலுக்கு முன் வரும் இடி...நயன்தாராவை புகழ்ந்த பாலிவுட் பாட்ஷா.!

இயக்குனர் அட்லீ இயக்கத்தில் பாலிவுட் பாட்ஷா என்று அழைக்கப்படும் ஷாருக்கான் நடிப்பில் 'ஜவான்' திரைப்படம் செப்டம்பர் 7 அன்று திரைக்கு வருகிறது. இப்படத்தின்

Jawan - nayan

இயக்குனர் அட்லீ இயக்கத்தில் பாலிவுட் பாட்ஷா என்று அழைக்கப்படும் ஷாருக்கான் நடிப்பில் ‘ஜவான்’ திரைப்படம் செப்டம்பர் 7 அன்று திரைக்கு வருகிறது. இப்படத்தின் முன்னோட்டத்தை தயாரிப்பாளர்கள் சமீபத்தில் வெளியிட்டிருந்த நிலையில், தற்போது படத்திலிருந்து நடிகை நயன்தாராவின் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

unknown node

Nayanthara – Jawan [file image]

இந்த படத்தில் நடிக்கும் நடிகர் ஷாருக்கான் மற்றும் விஜய் சேதுபதி இருவரும் நயன்தாராவின் புதிய போஸ்டரை வெளியிட்டனர். அந்த போஸ்டரில் ஒரு அதிரடி போலீஸ்அவதாரத்தில், இயந்திர துப்பாக்கியுடன் கருப்பு சன்கிளாஸில் ஸ்டைலாகவும் தோற்றமளிக்கிறார். இந்த போஸ்டரைப் பகிர்ந்துகொண்ட ஷாருக்கான் , புயலுக்கு முன் வரும் இடி அவள் என்று குறிப்பிட்டுள்ளார்.

unknown nodeunknown node

மேலும், இந்த படத்தில் நகைச்சுவை நடிகர் யோகி பாபு, சன்யா மல்ஹோத்ரா மற்றும் சுனில் குரோவர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இதில் நயன்தாரா விசாரணை அதிகாரியாகவும், பாலிவுட் நடிகர் ஷாருக்கான் இரட்டை வேடத்திலும் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்படம் இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகவுள்ளது

unknown node